
லெபோ அப்பாங்கில் அமைந்துள்ள பாபா சென்ட்ரலில் பதினெட்டாம் ஆண்டு விழாவும் பல்லாக்கு ஊர்வலம் பால்குடமும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். காலையிலிருந்து மாலை வரை சிறப்பு பூஜைகளும் தீபாரனையும் நடைபெற்றது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இந்த ஆலயத்தின் தலைவர் கூறும் போது இந்த வருடம் இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
