29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சமையல் எண்ணெய் கையிருப்பு நிலைத்தன்மையுடன் இருக்க நீண்ட கால அடிப்படையிலான தீர்வு

🔥 Views : 7
👁 Reading Now : 45

சந்தையில் பாட்டிகளில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் கையிருப்பு நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதிச் செய்ய நீண்ட கால அடிப்படையிலான தீர்வு வகுக்கப்படும். குறிப்பாக இம்மாதம் தொடங்கி மே மாதம் வரை அந்நிலையை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எண்ணெயை பாட்டில்களில் அடைத்து வெளியிடும் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தற்காலிகத் தீர்வே என அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி கூறினார். தற்போது நோன்பு மாதமாகும். அடுத்து ஹரி ராயா பெருநாள் வரும், அதன் பிறகு அறுவடைத் திருநாள், காவாய் திருநாள் என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கின்றன. இக்காலக் கட்டத்தில் சந்தையில் சமையல் எண்ணெய் தேவை அதிகம் இருக்கும் என்பதை அர்மிஸான் சுட்டிக் காட்டினார்.

எனவே தொழில்துறை மற்றும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நீண்ட கால அடிப்படையிலான தீர்வு அவசியம். ஆகவேதான் அதில் அமைச்சு கவனம் செலுத்தும் என அர்மிஸான் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles