25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

கிள்ளான் ஆற்றில் முதலையைத் தேடும் பணியில் தாமதம்

மலாயன் மேன்ஷன் அருகேயுள்ள கிள்ளான் ஆற்றில் முதலையைத் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் முதலையைப் பிடிக்கும் பணி தாமதமாவதாக கோலாலம்பூர் பொது பாதுகாப்புப் படை அதிகாரி Mej Ahmad Junaid Dukut Soerharto Ahmad கூறியுள்ளார். 

கனமழை பெய்து வருவதால் ஆற்றில் நீரோட்டம் வலுவாக உள்ளது. 

காவல்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை உதவியுடன், அதிகாரிகள் இரவு 11 மணிக்கு பொறி உபகரணங்களைத் தயாரித்தனர். ஆனால் முதலை இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது முதலையைத் தேடும் பணி தொடர்வதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles