
விவாதம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், ஆரோன் அகோ டாகாங் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணனுக்குத் தான் சொல்ல வேண்டும் என்று ஜம்ரி வினோத் கூறினார்.
இந்த விவாதத்திற்கு தன்னை முதலில் அழைத்தது டத்தோஶ்ரீ எம். சரவணன் தான் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், தனக்கும் மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணனுக்கும் இடையில் நடக்கவிருந்த விவாதத்தைத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஏன் அமைதியான முறையில் ஏற்பாடு செய்யவில்லை என்றும் ஜம்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
டத்தோஶ்ரீ எம். சரவணன் தனது விடுத்த சவாலை மீட்டுக் கொண்டு விவாதத்திலிருந்து விலகுவதாக அறிவித்தால், அவரின் முடிவைத் தாம் வரவேற்பதாக ஜம்ரி கூறினார்.
முன்னதாக, மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணனுக்கும் சமய போதகர் ஜம்ரி வினோத்துக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள விவாதம் தொடரக்கூடாது என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தினார்.
மத வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்தும் விவாதங்கள் மலேசியாவில் உள்ள பல மத சமூகங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும்.
குறிப்பாக உறவுகளைச் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
எனவே, வேறுபாடுகளைக் கண்டறிந்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளைப் புறக்கணிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டால்,
மதம் தொடர்பான விவாதங்கள் தொடரக்கூடாது என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
