30.7 C
Kuala Lumpur
Sunday, April 5, 2026

Vetri

முறையான உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் வியட்நாமிய மருத்துவர் கைது

இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கிளினிக்காக மாற்றி அதில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த ஒன்பது வியட்நாமினர்களை கோலாலம்பூர் குடிநுழைவு துறை கைது செய்துள்ளது. 

டெசா பெட்டாலிங் மற்றும் புக்கிட் ஜலீலிலுள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கிளினிக்காக மாற்றியுள்ளனர். 

கோலாலம்பூர் குடிநுழைவு துறை நடத்திய சோதனை நடவடிக்கையில் ​​கிளினிக்கின் முகவர்கள் என சந்தேகிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட வியட்நாமியர்களில் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஓர் உள்ளூர் ஆணும் பெண்ணும் கோலாலம்பூர் குடிவரவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

கிளினிக்கில்  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கிளினிக்கின் முகவர்களாகச் செயல்படும் உள்ளூர்வாசிகளுக்கு  லஞ்சமாக வழங்கப்பட்டதாக  Wan Mohamed  கூறினார்.

மூக்கு, கண் இமைகள் மற்றும் முக அழகுபடுத்துதல் போன்ற  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சேவைகள் வழங்குவதும் கண்டறியப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles