
செந்தோசா சட்டமன்றம், சோகா காக்காய் மலேசியா`(Soka Gakkai Malaysia), HTAR, பல்வேறு சுகாதார அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) இணைந்து மக்கள் சுகாதார தினத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இதற்க இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. DUN Sentosa சமூக சேவை மையம், இந்த சமூக நல முயற்சியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மனித நலத்திற்காக பணியாற்றும் சோகா காக்காய் மலேசியாவின் இந்த சிறப்பான முயற்சி பாராட்டத்தக்கது. இந்த உயர்ந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கருத்து தெரிவித்தார்.
