30.7 C
Kuala Lumpur
Sunday, April 5, 2026

Vetri

இனவெறித் தூண்டுதல் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தாகி விடக்கூடாது; கடும் நடவடிக்கைகள் தேவை!

இனவெறித் தூண்டுதல் சம்பவங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தாகி விடக்கூடாது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினைகளில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேன்டும்.

அதே வேளையில் விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நிலைமையை மோசமாக்கும் அறிக்கைகளால் எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையைத் தூண்ட முயற்சிக்கக்கூடாது.

சட்டம் அதன் கடமையை செய்யட்டும். எந்த தலையீடும் இல்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வலுவான அறிக்கையை நான் வரவேற்கிறேன்,

அவர் நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு இனரீதியான தூண்டுதலையும் நிராகரித்தார்.

மலேசியா ஒரு ஒன்றுபட்ட பல இன, பரஸ்பர மரியாதை கொண்ட நாடாக இருப்பதை உறுதி செய்வதற்கான அவரது உறுதிப்பாட்டை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்.

நாட்டின் நிலைத் தன்மை பாதுகாப்பைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் உள்துறை அமைச்சர் காட்டிய அக்கறை,  உறுதிப்பாட்டிற்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தை விரைவாகக் கையாண்டதற்காக  போலிஸ்படைத் தலைவருக்குப் பாராட்டுகள். உடனடி நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகளின் தீவிரம் பெரிதும் பாராட்டப்படுகிறது.

மேலும் மலேசியர்களின் ஒற்றுமையை அச்சுறுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் வினோத் ஜம்ரி போன்ற தனிநபர்கள் இன்னும் ஆத்திரமூட்டும் உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிட்டது மலேசியர்களின் ஒற்றுமையின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது.

இது தேசிய நல்லிணக்கத்திற்கு ஒரு வகையான சவாலாகும். இது தொடர அனுமதிக்கப்படாது.

ஆகவே ஜம்ரி வினோத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குணராஜ் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles