29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சிறப்பு நுழைவு அனுமதி பாஸ் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியாவில் 6 மாதங்கள் தங்கலாம்!

🔥 Views : 6
👁 Reading Now : 55

சிறப்பு நுழைவு அனுமதி பாஸ் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆறு மாத காலத்திற்கு நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

எதிர்க்காலத்தில் இந்தக் கால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும், சம்பந்தப்பட்ட பாஸ் வைத்திருப்பவர்களுக்கு பல்வகை நுழைவு விசா (MEV) வசதிகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட பாஸ் எதுவும் இல்லை.

முன்பு அவர்களுக்கு நாட்டின் தகுதிகளுக்கு ஏற்ப 14 முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவு கொண்ட பொது வருகை அனுமதிக்கான பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles