
மொரீஷியஸில் புனித ஏரியான கங்கா தலாவில், திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரை ஊற்றி பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, ‘த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்’ என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களும் இணைந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தனர்.