
ஏசான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டத்தோ அமிட் மேற்பார்வையில் 500க்கு மேற்பட்டோருக்கு நோன்பு அன்பளிப்பு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. வருடா வருடம் இந்த நோன்பு பெருநாள் அன்பளிப்பு ஏசான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சிறப்பு வருகையாக டத்தோ ஜவகர் அலி வருகை தந்து இந்நிகழ்ச்சியை தலைமை ஏற்றுள்ளார். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல எண்ணற்றவர்கள் நோன்பு பெருநாளில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜகவர் அலி அதிகமாக ஏழைகளுக்கு தொண்டுகள் செய்து வருகிறார். அவரைப் பார்த்து தான் நாங்களும் கடைபிடித்து வருகிறோம். எல்லோரும் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

