
மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பிகேஆர் கட்சியின் தேர்தலில், துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிடவுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்கட்சி குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என்று அவர் இன்று தேசிய எண்ணெய், எரிவாயு சேவைகள் மற்றும் உபகரணங்கள் (OGSE) தொழில் செயல் திட்டம் 2021-2030 இன் இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிகேஆர் கட்சி தேர்தலில் ரஃபிசி டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை எதிர்த்துப் போட்டியிட்டு அக்கட்சியின் துணை தலைவரானார்,
இருப்பினும் கடந்த 2018-ஆம் ஆண்டு மீண்டு் துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரஃபிசி டத்தோஸ்ரீ முஹம்மத் அஸ்மின் அலியிடம் தோற்றார்.
இந்தத் தேர்தலில் பிகேஆரின் முக்கிய கவனம், ஜனநாயக செயல்முறை ஆரோக்கியமான முறையில் இயங்குவதை உறுதி செய்வதையும், அரசாங்கக் கடமைகளில் அதன் உறுதிப்பாட்டைத் தொடர்வதையும் உறுதி செய்வதாகும் என்று ரஃபிசி கூறினார்
