29 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பிரதமருக்கு எதிராக விஷமக் கருத்துகளை ஒரு சில தீய சக்திகள் பரப்பி வருகின்றனர்! மலேசிய எம்.ஜி.ஆர். பொது நல மன்றத்தின் (MyNEEDS – எனது தேவைகள் பிரிவு) கேள்வி எழுப்புகிறது!

அண்மைய காலமாக பிரதமர் அன்வார் அவர்களுக்கு எதிராக ஒரு சிலர் விஷமக் கருத்துக்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டி வரும் இதுபோன்ற கும்பல்களை இந்தியர்கள் மத்தியில் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று மன்றத்தின் MyNEEDS பிரிவு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக இதுப்போன்ற கும்பல்களை உடனடியாக அடக்கப்பட வேண்டும் என்று வி.எம்.கோபி கேட்டுக்கொண்டார். இதுமட்டுமின்றி மாண்புமிகு பிரதமர் அன்வார் அவர்களின் நற்பெயரை கெடுக்கவும் இந்தியர்கள் மத்தியில் அவருக்கான உறவுபாலத்தை தீய வழியில் சிதைக்கவும் இந்த கும்பல்களின் வியூகமாக இருக்கின்றது என்று மைநீட்ஸ் பிரிவின் தலைவருமான வி.எம்.கோபி ஆணித்தரமாக வலியுறுத்தினார்.


இதற்கிடையே மைநீட்ஸ் பிரிவு, பிரதமருக்கு எதிரான தீய சக்திகளின் நடவடிக்கையை மக்கள் சந்திப்பின்போது தெரியப்படுத்தப்படும் என்று கோபி மேலும் கூறினார். அண்மையில் தோற்றம் கண்ட மைநீட்ஸ் பிரிவு நாடு முழுவதும் மக்கன் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி தீய சக்திகளின் பிரசாரத்தை முறியடிக்கும் என்று தேசியத்தலைவர் வி.எம்.கோபி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மைநீட்ஸ் பிரிவு அமைப்புக்கட்டத்தில் அதன் தேசியத்தலைவர் வி.எம்.கோபி, துணைத்தலைவர் கு.ஜெயபிரகாஸ், தலைமைச் செயலாளர் தனராஜன், விலாயா மாநிலத் தலைவர் ஏ.ஜெயராமன், சிலாங்கள் மாநிலத் தலைவர் வீரமோகன், இளைஞர் அணித் தலைவர் திவாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles