31.5 C
Kuala Lumpur
Tuesday, June 23, 2026

Vetri

பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டி சூடுபிடிக்கிறது: இந்தியர்களின் ஒற்றுமை வெற்றிக்கான தீர்வு!

🔥 Views : 8
👁 Reading Now : 47

தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை உறுதிசெய்துள்ளார். 2022ஆம் ஆண்டு முதல் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் அவர், தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியத்தை சொந்த செலவுக்காக பயன்படுத்தாமல், மக்களின் நலத்திட்டங்களுக்காக மட்டும் செலவிடுகிறார்.

இவர் தொகுதியில் உள்ள ஆலயங்களுக்கும், பொதுச் சங்கங்களுக்கும் தொடர்ந்து உதவியளித்து வருகிறார். அதேபோல், ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கும் தமது ஊதியத்திலிருந்து உதவித் தொகைகளை வழங்கி, மதநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் உதவி செய்வதில் தன்னலமற்ற சேவையை நிரூபித்துள்ளார்.

பதவியை தக்கவைத்துக் கொள்ளும் முன்னணி தலைவர்கள்

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 4 முக்கிய தலைவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்:

🔹 அமிருடின் சாரி – சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்
🔹 சாங் லே காங் – அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர்
🔹 நிக் நஸ்மி நிக் அகமது – இயற்கை வள, சுற்றுச்சூழல், நிலைத்தன்மை அமைச்சர்
🔹 அமினுடின் ஹரும் – நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார்

மேலும், நூருல் இசா அன்வார், ஃபஹ்மி ஃபட்சில் உள்ளிட்ட தலைவர்களும் போட்டியிட உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles