27.5 C
Kuala Lumpur
Tuesday, June 23, 2026

Vetri

ஜூன் 29 முதல் எல்ஆர்டி 3 சேவை தொடக்கம்!

🔥 Views : 1,200
👁 Reading Now : 57

ஷாஆலம், சிலாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும் எல்ஆர்டி 3 சேவை வரும் ஜூன் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைப்பார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

“எல்ஆர்டி 3 ஷாஆலம் சேவையின் தொடக்க விழாவை இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தொடங்கி வைப்பார். அதன் செயல்பாடுகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கும்,” என்று அவர் கூறினார்.

திபிஎஸ்சில் உள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் பண்டார் தாசிக் செலாத்தான் கிளையின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

எல்ஆர்டி 3 சேவை தொடங்குவதன் மூலம் ஷாஆலம் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles