31.2 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

விமானத்தில் தீ! கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட AirAsia விமானம் அதிரடி திருப்பம் – பயணிகள் பதற்றம்!

🔥 Views : 25
👁 Reading Now : 42

கோலாலம்பூரிலிருந்து சென்ஷான் நோக்கி புறப்பட்ட AirAsia A320-216 ரக விமானம், பயணிகளின் உச்சகட்ட பதற்றத்துக்கிடையில், திடீரென KLIA 2 விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

விமானம் havஇயந்திரத்தில் தீ பரவியதாகக் கூறப்படும் நிலையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவின் துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார், நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், 9 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.

விமானத்தின் PNEUMATIC DUCTING பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ ஏற்பட்டதாகவும், தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெருந்துயரம் தவிர்க்கப்பட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

171 பயணிகளும் விமான பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இத்தகைய திடீர் பாதுகாப்பு கோளாறுகள் AirAsia விமான சேவையின் பராமரிப்பு நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles