30.8 C
Kuala Lumpur
Monday, June 22, 2026

Vetri

மாணவர்கள் மீது அரசின் கட்டாய தேசபற்று? – ஜாலூர் கெமிலாங் சின்னம் இல்லாவிட்டால் அபராதமா?

🔥 Views : 9
👁 Reading Now : 62

மலேசிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் தங்களின் சீருடையில் கட்டாயமாக ஜாலூர் கெமிலாங் கொடி சின்னத்தை அணிய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையைத் தடையின்றி அமல்படுத்த, அனைத்து அரசுப் பள்ளிகள், அரசாங்க உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்விக் கூடங்கள் ஆகியவற்றிலும் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் நாட்டை நேசிக்கவும், சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கவும் இது உதவும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறதா, அல்லது இந்த கட்டாய விதி மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு எதிரான கட்டாய தேசபற்று முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கல்வியமைச்சு ஏதும் அறிவிக்கவில்லை. ஆனால் மாணவர்களின் சுதந்திர உரிமையில் இது தலையீடாகும் எனப் பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles