28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

ஆயர் கூனிங் இடைத்தேர்தல்: களத்தில் பிபிபி கட்சி தேசிய முன்னணிக்கு உறுதுணையாக..!

🔥 Views : 7
👁 Reading Now : 22

தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மூன்று வேட்பாளர்களுடன் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு உறுதுணையாக, மலேசியாவின் பிபிபி கட்சி முழுமையாக பிரச்சாரத்துக்குள் இறங்கியுள்ளது. இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் கட்சி தலைவர்கள் பெருமளவில் திரண்டனர்.

இந்த நிகழ்வில் பேராக் மாநில தலைவர் டத்தோ லீ ஹெங், செயலாளர் டத்தோ இந்தர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவர் புனிதா, தகவல் தொடர்புத் துறை துணைத் தலைவர் குமார், சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன், உச்சமன்ற உறுப்பினர்கள் நந்தா, கதிர், கெடா மாநில தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், ஜாலான் பெசார் ஆயர் கூனிங்கில் பிபிபி கட்சியின் சார்பில் தேர்தல் நடவடிக்கை அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று பிற்பகலில் தேர்தல் நடவடிக்கை அறையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles