24.7 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

நாதஸ்வர தவில் நுண்கலை பைன்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியில் ஆர்வத்தோடுபயிற்சி பெறும் மாணவர்கள்!

கோலாலம்பூர் ஏப்ரல் 12-
நாட்டில் இளம் மற்றும் திறமையான நாதஸ்வர தவில் கலைஞர்களை உருவாக்குவதில் அகிலா மலேசிய தமிழ் நாதஸ்வர இசை கலைஞர்கள் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தொடக்கத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே நாதஸ்வர தவிலை கற்றனர்.

இப்போது
47 மாணவர்கள் நாதஸ்வர தவில் பயின்று வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் கணேசன் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் தவிர்த்து டாக்டர்கள், வழக்கறிஞர்கள், விமானிகள் இப்போது ஆர்வத்தோடு நாதஸ்வர தவில் பயின்று வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு நாள் அதாவது சனிக்கிழமை தோறும் இந்த பயிற்சி வகுப்பு பிரிக்பீல்ட்ஸ் 32 ஏ ஜாலான் பெலியா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது .

இது தவிர்த்து ஜாலான் புடு புரூணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்திலும் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

மலேசிய மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழிசை சங்கத்தின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முறையாக பயிற்சியை வழங்கி வருகிறார்கள்.

மேலும்
தமிழ் நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

தவில் வித்துவான் கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன், நாதஸ்வர வித்துவான்கள் டாக்டர் விஜேய் கார்த்திகேயன், பிரகாஷ் நடராஜா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் வித்துவான்கள் என்று அவர் சொன்னார்.

நாதஸ்வர தவில் பயில்வதற்கு நாட்டில் உள்ள கோவில் நிர்வாகமும் மாணவர்களை அனுப்பி வைத்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

இதனிடையே
ஒரு
விமானியான சசிதரன் கடந்த மூன்று ஆண்டுகளாக தவில் பயின்று வருவதாக கூறினார்.

அதே சமயம் நாட்டில் பிரபல வழக்கறிஞர்
குணசீலன் தம்பி நாதனும் தவில் நாதஸ்வர நுண்கலை பயிற்சி மையத்தில் நாதஸ்வரம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தங்கள் பிள்ளைகளை நாதஸ்வர தவில் பயில்வதற்கு ஆர்வம் இருந்தால்
014 -3388756 கணேசன் அல்லது
இந்திராணி
016- 4551791 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles