
கோலாலம்பூர், ஏப்.11-
விடாமுயற்சி படத்திற்கு பிறகு, தமிழ் திரையுலகத்தின் மாஸ் ஹீரோ தல அஜித் குமார் நடிப்பில் உருவான ‘Good Bad Ugly (GBU)’ திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வெகு வேகமாக வரவேற்பை பெற்றுள்ளது.
டிரெய்லர் வெளியாகிய நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இத்திரைப்படம், குறிப்பாக மலேசியாவின் உள்நாட்டு பாடகர் டாக்கி பாடிய பாடல் மற்றும் அவரது காட்சி காணொளிகளால் சமூக ஊடகங்களில் வைரலானது. டாக்கிக்கு தமிழகத்திலும் கூட ரசிகர்கள் இருப்பது இதனால் தெளிவாகியது.
மலேசியாவில் GBU-வின் முதல் காட்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மலேசிய அஜித் ரசிகர் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஷா ஆலமிலுள்ள TSR Cinema-வில் விழாவாக நடந்தது. 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலையிலேயே கூடிவிட்டு, பட்டாசு வெடிப்பும், பனித்தூவலான வரவேற்பும் அளிக்கப்பட்டது. இவ் விழாவில் MS Malik Stream நிறுவனத்தின் டத்தோ மாலிக் பிரத்யேகமாக கலந்து கொண்டார்.
திரைப்படம் தொடங்கியதிலிருந்து முடிவுவரை, ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்திலிருந்தது. அஜித் குமார் மீண்டும் திரையில் வருவது ஒரு பண்டிகையைப் போலவே கொண்டாடப்பட்டது. அவரது ஸ்டைலான நடிப்பு, ஸ்டன்ட் காட்சிகள், ஆடல், மாஸ் சான்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆட்டத்தை தூக்கிவிட்டன.

படத்தின் சிறப்புக்குரிய ஒரு முக்கிய தருணம், அஜித்தின் கார் சிஜேஸ் சீனில் நம் உள்நாட்டு பாடகர் டாக்கி மற்றும் அவரது பாடல், ஆட்டம் சேர்க்கப்பட்ட காட்சியால் திரையரங்கமே அதிர்ந்தது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தல ரசிகராகவே, ரசிகர்களுக்காகவே இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்பதையே இந்த திரைப்படம் நிரூபிக்கிறது. திரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சிறந்த விஷுவல்ஸ், ரீமிக்ஸ் பாடல்கள், நகைச்சுவை பேச்சுகள் என, GBU ரசிகர்களை முற்றிலும் கவர்ந்த திரைப்படமாக அமைந்துள்ளது.

தல அஜித் தனது “டக்கர் டோய்” பாணியில் மீண்டும் திரையுலகத்தை அலங்கரித்துள்ளார். ரசிகர்களின் முழு ஆதரவுடன், இந்த படம் மெகா ஹிட் எனவே இருக்கப்போகிறது.
