28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

மக்களின் அடையாளத்தை வடிவமைத்த தலைவர்… துன் படாவி மறைவுக்கு செந்தோசா தொகுதி உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் உருக்கம்!

🔥 Views : 8
👁 Reading Now : 65

மலேசியா இன்று எளிமையான மதிப்புகளுடன் மக்களின் வாழ்க்கையைத் தொட்ட அரசியல் தலைவரை இழந்துள்ளது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“துன் அப்துல்லா ஒரு நேர்மையான, தன்னலமற்ற அரசியல்வாதி. மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டியவர். அவர் நாட்டை வளர்த்து, நவீன முறையில் ஒழுங்கு படுத்தியதோடு, எளிமையான மற்றும் தூய்மையான அரசியல் நடைமுறையை ஏற்படுத்தினார்,” என்றார் குணராஜ்.

மறைந்த துன் அப்துல்லா அஹமட் படாவி, மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக இருந்து, அவரது நேர்மை, பணிவு, மக்களுக்கான அக்கறை போன்ற பண்புகளால் தேசியம் சார்ந்த தலைவராக மக்கள் மனதில் நிலைத்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“மறைந்த துன் படாவி, வரலாற்றிலும், மக்களின் நினைவுகளிலும் மரியாதைக்குரிய தலைவராக தொடர்வார்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles