28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

உலு லங்காட் கெஅடிலான் தலைவர் தேர்தலில் ராஜன் முனுசாமி அபார வெற்றி

🔥 Views : 6
👁 Reading Now : 38

கெஅடிலான் கட்சியின் உலு லங்காட் தொகுதி தலைவருக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி மிகப்பெரும் வெற்றியுடன் மீண்டும் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இவர் 1845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதோடு, போட்டியிட்ட முகமது ஹானாபி ஜாலாலுடின் வெறும் 1072 வாக்குகளையே பெற்றார்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ராஜன் கூறியதாவது:

“இந்த வெற்றி, ஒற்றுமையான முயற்சி மற்றும் உறுப்பினர்களின் உறுதுணைதான். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

அத்துடன், போட்டியிட்ட வேட்பாளருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற கெஅடிலான் தேர்தல்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கெஅடிலான் தலைவர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நேர்மை மற்றும் மக்கள் நம்பிக்கைக்கு தகுந்த தலைமைத்துவத்தின் கீழ், கட்சி தொடர்ந்து மக்கள் குரலாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles