
நடிப்பில் மட்டுமல்ல… தற்போது வேகத்திலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தல அஜித்!
பெல்ஜியத்தில் நடைபெற்ற பிரபல கார் பந்தயத்தில், அஜித் தலைமையிலான ரேசிங் அணி இரண்டாவது இடத்தை வென்று, சர்வதேச களத்தில் இந்திய நாட்டு குரலாக மின்னியுள்ளது.
பந்தயத்திற்கு முன், கடுமையான ட்ரைனிங் எடுத்த அஜித், பயிற்சிக்காலத்தில் விபத்துக்குள்ளானதும், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கி போட்டியில் தன்னம்பிக்கையோடு பங்கேற்றதும் ஒரு வீரரின் தைரியத்தைக் காட்டுகிறது.
“வீண் வேகமாக இல்ல… வெற்றி வேகமாக!” – இதுவே தல அஜித் அளித்த பதிலடி!
இந்த சாதனை, அவரின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல… இந்திய ரசிகர்களுக்கான பெருமையும் கூட. ஸ்பீடில் கலக்கிய இந்த வெற்றி, ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கி உள்ளது!