24.7 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

🙏🌸 அன்பும் நம்பிக்கையும் ஒளிர்ந்தது சீயோன் பேராலயத்தில்!” – ஈஸ்டர் திருநாள் அருள் நிரப்பி கொண்டாடப்பட்டது

குரூப்பில் அமைந்துள்ள சீயோன் பேராலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிரம்பிய நிகழ்வாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இத்திருநாளில் சிருஷ்டிக்கெல்லாம் உயிரும் நம்பிக்கையும் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுபடுத்தும் சிறப்பான வழிபாடுகள் நடந்தன.

பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு, இறைவனுக்கு ஜெபம் செய்தனர். சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் பங்கு பெற்ற இந்த ஆன்மீக விழாவில், திருச்சபை ஆராதனை ஒலியில் முழுமையாக குளித்தது!

“அனைவரிடமும் அன்பாக இருங்கள்… நன்மை செய்ய தயங்காதீர்கள்…” என்று இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டிய போதகர் டேவிட் தேவப்ரியன்,
“இறைவனிடம் அன்புடன் வாழ்ந்தால், ஆண்டவர் அருளும் உங்களைத் தொடரும்!” என்று உருக்கமாக உரையாற்றினார்.

இந்நிகழ்வின் மூலம், சமுதாயத்தில் அன்பும் ஒற்றுமையும் வளர வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles