28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

வாசிப்போம் நேசிப்போம் நித்திரை கதைகள் அறிமுக விழா

🔥 Views : 13
👁 Reading Now : 29

வாசிப்போம் நேசிப்போம் என்ற நிகழ்வு அண்மையில் அன்னலட்சுமி உணவகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதற்கு சிறப்பு வருகையாக தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சரின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தலைமையேற்று வழிநடத்தினார் அவர் பேசும்போது நித்திரை கதைகள் என்ற அருமையான அருமையான நூலை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

இது வரவேற்கத்தெருக வேண்டிய நிகழ்ச்சியாக இன்று நடைபெறுகிறது இதில் பள்ளி மாணவர்களுக்கு பயன்பட வகையில் இந்த நூல்கள் அமைந்துள்ளது மனதார பாராட்டுகிறேன் இது போன்ற பயனுள்ள நூல்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுமாறு இருக்க வேண்டும் இதை மதிப்புமிகு அமைச்சர் டத்தோ ராமனிடம் எடுத்துக் கூறுவேன். அவரும் இதற்கு ஆதரவு தருவார். இன்றும் நாங்கள் இந்த நிகழ்விற்கு பெரும் ஆதரவை கொடுத்துள்ளோம் இதுபோன்ற நல்ல நூல்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வரவேற்புரை கவிமாறன் கூறும்போது வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. தினசரி நாளிதழ்கள் குறைந்து கொண்டே வருகிறது இதை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இது போன்ற புத்தகங்களை வாங்கி அனைவரும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும் வாசிப்பு முக்கியமானதாக இருக்கும். பத்திரிகைகளும் சிறப்பான முறையில் வெற்றிபெறும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் நூல் ஆசிரியர் நிரோஷா கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles