
மலேசிய தெக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் விலாயா மாநிலம் 16 தங்கம் 8 வெள்ளி 10 வெண்கலம் வென்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு விலாயா மாநிலம் மலேசிய தெக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.
இம்மாதம் நீலாய் மாவட்டத்தில் நடந்த இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்ட வேளையில் விலாயா மாநிலம் ஒட்டுமொத்தமாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

பத்து நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பத்து மாணவர்கள் விலாயா மாநிலத்தை பிரதிநிதித்து வெற்றி பெற்றுள்ளனர்.
அடுத்து வரும் போட்டிகளிலும் விலாயா தெக்வாண்டோ குழு பல வெற்றிகளை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரபாகரன் கலந்து சிறப்பித்தார்.
விலாயா மாநில தெக்வாண்டோ சங்கத்தின் தலைவர் டத்தோ ஜி.எம்.பாலகிருஷ்ணன், துணை தலைவர் செல்வமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.