28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

🎶 உள்ளூர் கலைஞர்களின் இசை விழா – DIVINE FUSION A Musical Journey Beyond Boundaries

🔥 Views : 11
👁 Reading Now : 31

வருகிற ஜூன் 7ஆம் தேதி, மாலை 6 மணிக்கு, Temple of Fine Arts, Brickfilds- ல் நடைபெற உள்ள உள்நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நம்மைத் தெய்வீக இசை அனுபவத்திற்குள் அழைத்து செல்ல உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் பங்க்சாரில் உள்ள “சுருதி இசை மண்டபத்தில்” சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் நிர்வாகி திரு. கலைச்செல்வன் தெரிவித்ததாவது:

“இசை என்பது தெய்வீக கலையாகும். இந்த தெய்வீக அனுபவத்தை வழங்க 10 பேர் கொண்ட நமது இசைக்கலைஞர்கள், மிருதங்கம், கிட்டார் போன்ற நவீன இசைக்கருவிகளுடன் இசை நிகழ்த்த உள்ளனர். இது உண்மையான மெல்லிசை இசையின் விருந்தாக அமையும்”.

அவர் மேலும் கூறுகையில்,

“இது போன்ற நிகழ்ச்சிகள் உள்நாட்டு கலைஞர்களுக்கு முக்கிய ஆதரவாக அமையும். அதனால் அனைவரும் கலந்துகொண்டு உற்சாகத்தைப் பகிர வேண்டும்” என்றார்.

🎟️ டிக்கெட்டுகள் இப்போது விற்பனைக்கு!

  • அணுசரணமான விலை, பரபரப்பான விற்பனை!
  • myticket.asia இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளைப் பெறலாம்:
    👉 www.myticket.asia

📍 நிகழ்வு விவரங்கள்:

  • தேதி: 7 ஜூன் 2025
  • நேரம்: மாலை 6 மணி
  • இடம்: Temple of Fine Arts, Brickfields – முழு விபரங்கள் டிக்கெட் பக்கத்தில்

உற்சாகம், இசை, நம்முடைய உள்ளூர் திறமைகளை கொண்டாடும் இந்த இசை நிகழ்ச்சிக்கு, உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles