
நாட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்கி வருகிறது.
கூட்டுறவு சங்கம் தனது அங்கத்தினர்களுக்கு பலவிதமான சலுகைகள் நன்மைகள் வழங்குவதால் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை 3 ஆவது இடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் இரு இடங்களில் அரசாங்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இதற்கு அடுத்த படியாக தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் வெற்றிகரமாக வளர்ச்சிக்கு அங்கத்தினர்களின் பேராதரவு முக்கிய காரணம் ஆகும்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் கடந்த 57 ஆண்டுகளாக பலவிதமான சலுகைகளை அங்கத்தினர்களுக்கு வழங்கி வருகிறது.
எந்த ஊரு நிறுவனத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அங்கத்தினர்களின் ஆதரவு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் அவர்.
இன்று பெட்டாலிங் ஜெயா ஆர்மாடா தங்கும் விடுதியில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் 57 ஆவது ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈடு வழங்கப்படுவதாக தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன் தெரிவித்தார்.
மேலும் ஒரு வெள்ளி போனஸ் பங்குக்கு 50 காசு வழங்கப்படுகிறது.
உதாரணமாக ஆயிரம் வெள்ளி பங்குக்கு 500 வெள்ளி வழங்கப்படும் என்றார்.
அங்கத்தினர்களின் நலன்களை காக்கும் பொருட்டு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் பல சலுகைகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக .
அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடனுதவி, துன் சம்பந்தன் உபகார சம்பளம், எஸ்பிஎம் – எஸ்டிபிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது
அதேபோல்
வீட்டு கடனுதவி, அங்கத்தினர்களுக்கு மருத்துவ நிதி, மரண சகாய நிதி, இருதய அறுவை சிகிச்சை நிதி, கண் அறுவை சிகிச்சை நிதி, புற்றுநோய் – சிறுநீரக சிகிச்சை நிதி, மூத்த அங்கத்தினர்களுக்கு உதவி நிதி என்று பல உதவிகள் வழங்கப்படுகிறது.
இது தவிர்த்து அங்கத்தினர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 60,000 அங்கத்தினர்கள் நன்மை பயக்கும் என்று அவர் சொன்னார்