28.5 C
Kuala Lumpur
Saturday, August 15, 2026

Vetri

Sheng Ma Gong சீன ஆலயத்தில் வழிபாடு; டாக்டர் குணராஜ் பங்கேற்பு

🔥 Views : 3,361
👁 Reading Now : 57

Sheng Ma Gong சீன ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஆலயத்திற்கு வருகை தந்த அவருக்கு நிர்வாகத்தினர் மற்றும் சமூகத்தினர் அன்பான வரவேற்பை வழங்கினர். இதற்காக ஆலய நிர்வாகத்தினருக்கும் சமூக மக்களுக்கும் டாக்டர் குணராஜ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“நமது பிரார்த்தனைகள் அனைவருக்கும் நல்வாழ்வு, ஆசீர்வாதம் மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். நமது சமூகத்தில் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்க உணர்வை தொடர்ந்து வளர்ப்போம்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

பல்வேறு இன, மத மற்றும் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருவரையொருவர் மதித்து ஒற்றுமையுடன் வாழ்வதே மலேசிய சமூகத்தின் வலிமை என்பதையும் டாக்டர் குணராஜ் தனது பதிவின் மூலம் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles