28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பாடாத பாட்டெல்லாம் இன்னிசை நிகழ்ச்சி!

மலேசிய மற்றும் தமிழக கலைஞர்கள் இணைந்து, புகழ்பெற்ற திரைப்படங்களின் அற்புதமான பழைய பாடல்களை இசையுடன் பரிமாறும் சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 23ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பத்துமலை செங்கா கான்வென்ஷன் ஹாலில் (Batucaves Shenga Convention Hall) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

டிக்கெட்டுகள் தற்போது இணையதளம் வாயிலாக பரபரப்பாக விற்பனையில் உள்ளன. இந்நிகழ்ச்சியை விஷால் நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது. ரவாக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி மையத்திற்கு பத்தாயிரம் வெள்ளி மதிப்பிலான இந்நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை தொழிலதிபர் டாக்டர் விஷ்வா அவர்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

“இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டார். டிக்கட்டுகளை ticket2u.com.my என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles