25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🥋 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும் – மலேசிய சிலம்ப கழகம் வலியுறுத்தல்!

🔥 Views : 9
👁 Reading Now : 20

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சிலாங்கூர் சுக்மா (SUKMA) போட்டியில் “சிலம்பம்” விளையாட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுக்மா போட்டியில் சிலம்பத்தை நீக்கியது மிகுந்த அநியாயம். இதில் பங்கேற்க 2000க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டாளர்கள் தயாராக உள்ளனர். போட்டிக்கான அரங்கும் தேர்வு செய்யப்பட்டது, பட்ஜெட் பற்றிய விவரங்களும் நாங்கள் முன்வைத்திருந்தோம். இந்நிலையில் திடீரென சிலம்பத்தை நீக்கியது, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,”
என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

2023-இல் சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற சுக்மா போட்டியில், சரவாக், சபா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். அப்போது மொத்தமாக 14 தங்கம், 14 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் வழங்கப்பட்டது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் சுக்மா உயர் கவுன்சில் குழு இப்போது இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சிலம்பத்தை மீண்டும் போட்டியில் சேர்க்க வேண்டுமெனவும்,

சிலம்பம் இன்மையின் பிழை திருத்தப்பட வேண்டும். இளம் வீரர்களின் எதிர்பார்ப்பை கைவிடக் கூடாது,”
என டாக்டர் சுரேஸ் வலியுறுத்தினார்.

சிலம்பம் போன்ற பாரம்பரிய மலேசிய-இந்திய மைத்திர விளையாட்டுகளை உரிமையுடன் பாதுகாப்பது அவசியம் என அவர் அழுத்தமாகக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles