
மலேசிய இந்திய பொது நல மன்றத்தின் ஏற்பாட்டில், வருகிற 23-08-2025 மாலை 6 மணிக்கு, கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் நடைபெற உள்ள பாடல் திறன் போட்டி மிகச் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவர் ஏ. கே. குமார் அவர்கள் பேசுகையில்,
“இப்போட்டி வருடந்தோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெறுகிறது. இவர்கள் பற்பல திறமைகளுடன் இருக்கின்றனர். அந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டியது நம் பொறுப்பு. அவர்களை ஊக்குவிக்கவே இந்த பாடல் போட்டியை நடத்தி வருகிறோம்,”
என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் போட்டி இறுதிச்சுற்று சோமா அரங்கத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே கோலாலம்பூர், சிரம்பான் உள்ளிட்ட நகரங்களில் முன்னிலை சுற்றுகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பக்தி மற்றும் சினிமா பாடல்கள் இடம்பெறும். போட்டியில் தேர்வாகும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும். பலர் எதிர்பார்க்கும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
டிக்கெட்டுகள் தற்போது சோமா அரங்கத்தில் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக கிடைக்கின்றன. டிக்கெட் விலை: RM 20.00.
தொடர்புகளுக்குத் தேவையானவர்கள், மன்றத்தின் முகவரை அணுகலாம்.
“இது குழந்தைகளுக்கான மேடை — அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்!” என மன்றத் தலைவர் குமார்த் தமது வேண்டுகோளை உருக்கமாக தெரிவித்தார்.
