27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

🎶 ஜோகூரில் வருகிற 9ஆம் தேதி தேவாவின் இன்னிசை இரவு – டிக்கெட் விற்பனை களைகட்டும்!

🔥 Views : 36
👁 Reading Now : 37

தமிழ் திரைப்பட உலகில் “மெலடி கிங்” என அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, வருகிற ஒன்பதாம் தேதி ஜோகூர் பாருவில் நடைபெற உள்ள அவரது பிரமாண்ட இன்னிசை இரவுக்காக தற்போது மலேசியாவில் உள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது பெரும் வேகத்தில் விற்பனையாகி வருகின்றன. இசை ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா வருகையின்போது, தேவா கோலாலம்பூர் கோட்டுமலை விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு பூஜை மேற்கொண்டார். அவருக்கு ஆலய நிர்வாகத்தினரால் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தேவாவின் மலேசிய இசை ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இசை அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles