32.5 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

உள்ளூர் கலைஞர்கள் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் மூலம் சாதனை படைத்து வருகின்றனர்!

🔥 Views : 23
👁 Reading Now : 41

மலேசியாவில் உள்ளூர் கலைஞர்கள் தங்களது திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பத்துமலையைச் சேர்ந்த நடனக் கலைஞர் ராஜா தலைமையில், ரஜினி வாசு மற்றும் அஸ்ட்ரோ புகழ் ‘நாட்டிய தென்றல்’ ஈஸ்வரி ஆகியோர் இணைந்து மலேசியாவின் பல இடங்களில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நடனக் கலைஞர் ராஜா கூறுகையில், “உள்ளூர் கலைஞர்களை ஆதரிக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கவும் வேண்டும். எங்கள் குழு நாடு முழுவதும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. விரைவில் மெந்தகாப்பிலும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்,” என்றார்.

மேலும், வரும் தைப்பூசத் திருவிழா நாட்களில் பத்துமலையில் அவர்களின் குழுவினரால் தினமும் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles