28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நோய் தொற்று எண்ணிக்கை குறைத்தால்! SOP விதிமுறைகள் தளர்த்தப்படும்

🔥 Views : 13
👁 Reading Now : 42

நாட்டில் நாட்டில் நோய் தொற்று தாக்கம் குறைந்தால் எஸ்ஒபி விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
நோய்த்தொற்று குறைந்தால் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.
தற்போது அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்படாது.
இருப்பினும் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நான்காயிரமாக குறைந்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மறுபரிசீலனை செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா மற்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் என்னிடம் தெரிவித்தனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது இதன் பொருளல்ல.
மாறாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தளர்த்துவது குறித்து நாம் பரிசீலிக்கலாம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles