
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் மூன்றாவது கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம் சனிக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 விழுக்காடு மேல் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட இடங்களை மையமாக கொண்டு மூன்றாம் கட்ட இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் தெரிவித்தார்.
காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை இந்த இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஒப்புதலை பொறுத்து இத்திட்டம் அமல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



