29.6 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

‘டித்வா’ புயலால் இலங்கையில் மனித குல அவலம்: தமிழ் நாட்டு முதல்வர் இன்று நிவாரணப் பொருட்கள் அனுப்புகிறார்!

🔥 Views : 24
👁 Reading Now : 65

தமிழ்நாட்டு அரசின் சார்பில், டித்வா’ புயலால் மிகக்கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள இலங்கைவாழ் மக்களுக்கு அவசர உதவி வழங்கிடும் வகையில் அடிப்படைப் பண்டங்களான பருப்பு, சர்க்கரை, பால் மாவு, போர்வை, கோரைப் பாய், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இன்று டிசம்பர் 06-ஆம் நாள் சனிக்கிழமை காலையில் முதலமைச்சர் மு.க.ஸடாலின் அனுப்பி வைக்க உள்ளார்.

தூய்மையான குடிநீர் இன்றியும் உணவுத் தட்டுப்பாட்டாலும் மிகவும் பாதிக்கப்பட்டு அல்லலுக்கு ஆட்பட்டுள்ள இலங்கை மக்களுக்கான அவசியப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட உள்ளன.

உணவுப் பண்டங்களும் ஏனையப் பொருட்களும் சேமிக்கப்பட்ட கப்பல், சென்னை வட துறைமுகத்திலிருந்து இந்திய நேரம் காலை 11.45 மணியளவில் புறப்பட இருக்கிறது.

இந்தக் கப்பலை முதல்வர் மு.க. ஸடாலின் கொடி அசைத்து தொடக்கி வைக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles