28.5 C
Kuala Lumpur
Thursday, June 4, 2026

Vetri

சபரிமலை யாத்திரை முன்னிட்டு சுரேஷ் அவர்கள் இல்லத்தில் படி பூஜை!

🔥 Views : 6
👁 Reading Now : 28

செய்தி : எம்.முருகன்
பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான சுரேஷ் அவர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அண்மையில் தனது இல்லத்தில் படி பூஜை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

இந்தப் படி பூஜை, குருசாமி தலைமையில் பக்திபூர்வமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஐயப்பன் நாமம் முழங்க, ஆன்மிக உற்சாகத்துடன் நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குருசாமி டத்தோ பிரகாஷ், “ஐயப்பனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சபரிமலை யாத்திரை செல்லும் போது, விதிமுறைகளை கடைப்பிடித்து, தினமும் ஐயப்பனை நினைத்து ஐயப்பன் பஜனைகளை நடத்தினால், வாழ்வில் என்றும் நலம், அமைதி மற்றும் அருள் நிலைத்திருக்கும்” என்று கூறினார்.

இந்த படி பூஜை நிகழ்ச்சி, பக்தர்களிடையே ஆன்மிக எழுச்சியையும் ஐயப்பன் பக்தியையும் மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தது. 🙏✨

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles