
செய்தி / படங்கள் : எம்.முருகன்
லோட்டஸ் குழும பணியாளர்கள் ஏற்பாட்டில், வள்ளல் ரெங்கசாமி பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா, திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் கேக் வெட்டி, மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.

வள்ளல் ரெங்கசாமி பிள்ளையின் சமூக சேவைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா, அன்பு, ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

