33.1 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

🐶 நாய்க்குட்டிக்கு கொடுமை: இளைஞர் கைது; வைரலான வீடியோவுக்குப் பிறகு போலீஸ் நடவடிக்கை!

நாய்க்குட்டியை நீர் தொட்டியில் மூழ்கடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, விலங்கு கொடுமை குற்றச்சாட்டில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ராம்சே எம்போல் தெரிவித்ததாவது,
சந்தேக நபர் 20 வயதுகளில் உள்ளவர் என்றும், அவர் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் Section 32 பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் கூறினார்.

இந்த கைது நடவடிக்கை, அதே நாள் அதிகாலை 2.14 மணியளவில் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. TikTok தளத்தில் சம்பவம் தொடர்பான வீடியோ பரவியதும் போலீசார் விரைந்து செயல்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது போலீசாரும் செலாங்கூர் விலங்கு மருத்துவ சேவைத் துறையும் இணைந்து, சந்தேக நபரிடமிருந்து மூன்று நாய்களை பறிமுதல் செய்தனர்.

“இந்த வழக்கு, விலங்கு நலச்சட்டம் 2015 – பிரிவு 29 மற்றும் குற்றவியல் சட்டம் – பிரிவு 428 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என ராம்சே தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் உள்ளவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லெய்மண்ட் ரெய்ன் (014-6907071) என்பவரை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles