29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

நவீனமய தகவல்களை கற்றுக் கொள்ள இந்த பயிற்சி உதவும்!

🔥 Views : 23
👁 Reading Now : 35

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நவீனமய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த பயிற்சி உதவும் என தாம் நம்புவதாக நிறுவன பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் பத்து கேவ்ஸை சேர்ந்த ராஜேஸ்வரி கூறுகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தனியாக Infinate Training & Consultancy பயிற்சி நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக அவர் சொன்னார்.


தங்களின் வேலை இடங்களில் சவால்களை எதிர்நோக்கும் பணியாளர்களுக்கு பயிற்சியை தாம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் வேலை இடங்களில் மன அழுத்தத்தை எதிர்நோக்கும் ஊழியர்களுக்கு அதற்கு தகுந்தவாறு பாடத்திட்டத்தை வடிவமைத்து இந்த பயிற்சிகளை நான் வழங்கி வருகிறேன்’ என்றார் அவர்.
பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் எப்படி புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது என்பது குறித்தும் தமது பயிற்சி தாம் கற்று தருவதாக அவர் சொன்னார்.
ஏற்கனவே ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் ஒப்ரேஷன் மேனேஜராக சற்று காலம் பணி புரிந்ததால், அந்த அனுபவம் தற்போது தமக்கு உதவியாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கப்படும் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் சொந்த இணையதளத்தை எப்படி உருவாக்குவது உட்பட பல நுணுக்கமான தகவல்களை தம்மால் தெரிந்து கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles