29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பன்றி பண்ணைகளுக்கு கடும் நிபந்தனை… பின்னணி என்ன?

🔥 Views : 1,942
👁 Reading Now : 53

சிலாங்கூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கில், பன்றி வளர்ப்புத் தொழிலுக்கு மத்திய அரசு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்ததாவது, இனி பன்றி பண்ணைகள்:
👉 மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து
👉 நீர் ஆதாரங்களிலிருந்து

தொலைவில் உள்ள புதிய இடங்களில் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததாகவும்,
👉 சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் ஆலோசனை
👉 மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் ஆலோசனை

இவற்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பன்றி பண்ணைகளில் கழிவு மேலாண்மைக்கு நவீன தொழில்நுட்பங்களை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் சிலாங்கூர் சுல்தான், மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் பன்றி வளர்ப்புக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles