29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

RON95, டீசல் விலை உயர்வு!

🔥 Views : 2,688
👁 Reading Now : 20

ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4.90 ரிங்கிட் என்ற நிலையில் மாற்றமின்றி நீடிக்கிறது.

ஆனால், தீபகற்ப மலேசியாவில் மானியமில்லாத ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தலா 5 சென் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் மே 7 முதல் 13 வரை அமலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், மக்களுக்கான இலக்கு மானிய விலைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. அதன்படி,
👉 ரோன் 95 (பூடி95) ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்
👉 சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட்

என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம், கடந்த வார சராசரி எண்ணெய் விலைகளை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி விலை முறை (APM) மூலம் கணக்கிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் நிலைமை காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை இன்னும் அதிர்வில் உள்ளதால், விலை உயர்வுக்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles