
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமோக வெற்றி பெற்றார்.
இவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.
இவருக்கு ஆதரவு தர காங்கிரஸ் கட்சி முன் வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
மேலும் சில கட்சிகள் ஆதரவு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய தமிழக முதல்வர் விஜய் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை தருவார் என பெரிதும் எதிர்பார்ப்பதாக மலேசிய மக்கள் கொமுனிகேஷன் டாக்சி சங்கத் தலைவர் முத்து நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழல் இல்லாத ஆட்சி, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை, மாணவர்களுக்கு இலவச கல்வி உட்பட பல திட்டங்களை வகுத்து அவர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ் நாட்டில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும்.
குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்க வேண்டும்.
புதிய தமிழக முதல்வர் விஜய் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முத்து கேட்டுக் கொண்டார்.



