34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஆசிய நாணயச் சந்தையில் புதிய வரலாறு

🔥 Views : 2,021
👁 Reading Now : 54

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 28 வரை, அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.64 விழுக்காடு உயர்ந்துள்ளது. 

இதன் மூலம் ஆசியாவிலேயே மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய நாணயமாக ரிங்கிட் உருவெடுத்துள்ளது. 2.23 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அபார வளர்ச்சிக்கு மலேசியாவின் வலுவான பொருளாதார அடித்தளமே காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மலேசியாவின் மார்ச் மாத வர்த்தகப் புள்ளிவிவரங்கள் 9.3 விழுக்காடு உயர்ந்து RM27,300 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளன. ஏற்றுமதி 8.3 விழுக்காடும், இறக்குமதி 10.4 விழுக்காடும் அதிகரித்துள்ளன. 

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 விழுக்காட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதனைத் தாங்கும் வலுவான பொருளாதார நிலையில் மலேசியா இருப்பதாக வங்கி முஅமலாத் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அஃப்ஸானிஸாம் தெரிவித்துள்ளார். – Nambikkai.com.my

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles