27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

⚽ “மகிழ்ச்சியில் மலேசிய ரசிகர்கள்!” – 2026 உலகக்கோப்பை 104 போட்டிகளும் RTM-ல் இலவச ஒளிபரப்பு!

🔥 Views : 1,312
👁 Reading Now : 27

மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் அனைத்து 104 போட்டிகளும் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM) மற்றும் யூனிஃபை டிவி வழியாக ஒளிபரப்பப்படும் என்று தகவல்தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

யூனிஃபை, செல்காம் டிஜி மற்றும் யூ மொபைல் ஆகிய நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை மக்களிடம் விரிவாக கொண்டு சேர்ப்பதுடன், கூடுதல் செலவின்றி தரமான உள்ளடக்கத்தை வழங்கும் பொது ஒளிபரப்பின் பங்கையும் மேலும் வலுப்படுத்தும் என ஃபஹ்மி தெரிவித்தார்.

“தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RTM, யூனிஃபை, செல்காம் டிஜி மற்றும் யூ மொபைல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று, 2026 உலகக்கோப்பையின் அனைத்து 104 போட்டிகளும் RTM மற்றும் யூனிஃபை டிவி வழியாக ஒளிபரப்பப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் அங்கசாபுரியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு மலேசிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles