27.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

⛽ “வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி!” – பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி குறைப்பு

🔥 Views : 1,454
👁 Reading Now : 43

மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி, மானியம் இல்லாத டீசலின் விலை 30 சென் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் 4.87 ரிங்கிட் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

அதேவேளை, மானியம் இல்லாத ரோன் 97 பெட்ரோலின் விலை 20 சென் குறைந்து, ஒரு லிட்டர் 4.70 ரிங்கிட் என்ற விலையில் வழங்கப்படும்.

ரோன் 95 பெட்ரோலின் சில்லறை விலையும் 15 சென் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் 3.87 ரிங்கிட் என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த புதிய எரிபொருள் விலைகள் மே 14 முதல் மே 20 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தானியங்கி விலை நிர்ணய முறை (Automatic Pricing Mechanism) சூத்திரத்தின்படி, அனைத்துலக சந்தையில் ஏற்பட்ட விலை சரிவைத் தொடர்ந்து இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தீபகற்ப மலேசியாவில் டீசல் மற்றும் மானியம் இல்லாத ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலை காரணமாக, உலக எரிபொருள் விலைகள் மோதலுக்கு முந்தைய நிலைகளை விட இன்னும் அதிகமாகவே உள்ளன என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles