27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

☀️ “மலேசியா முழுவதும் கொளுத்தும் வெயில்!” – சில பகுதிகளில் 32°C வரை வெப்பம் பதிவு

🔥 Views : 1,348
👁 Reading Now : 51

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் மக்கள் கடும் வெப்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் (MetMalaysia) இணையத் தளத்தில் இன்று நண்பகல் வெளியிடப்பட்ட தகவலின்படி, பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா மற்றும் கங்கார் ஆகிய பகுதிகளில் வெயில் நிறைந்த வானிலையுடன் தலா 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கூச்சிங் பகுதியில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, நாட்டின் மிகவும் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

மேலும், Kuala Terengganu மற்றும் Kota Bharu பகுதிகளிலும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அலோர் ஸ்டாரில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டுள்ளது.

அதேவேளை, கோத்தா கினபாலுவில் 28 டிகிரி செல்சியஸ் மற்றும் லபுவானில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

புத்ராஜெயா, ஈப்போ, குவாந்தன் மற்றும் குவாலா பிலா பகுதிகளில் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பயான் லெபாஸ் மற்றும் செனாய் பகுதிகளில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்தி, வெளிப்புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles