27.6 C
Kuala Lumpur
Wednesday, July 8, 2026

Vetri

ஜொகூர் தேர்தலில் 60% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்ட நம்பிக்கை கூட்டணி

🔥 Views : 3,372
👁 Reading Now : 36

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் வருகையை இலக்காகக் கொண்டு நம்பிக்கை கூட்டணி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்ட கவனம் ஜொகூருக்கு வெளியிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் வாக்காளர்களை சொந்த மாநிலத்திற்குத் திரும்பி வாக்களிக்கச் செய்வதிலேயே உள்ளது என்று அவர் கூறினார்.

குறிப்பாக, வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் ஜொகூர் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றக்கூடியவர்கள் என்பதால், அவர்களை வாக்களிக்கத் திரும்பச் செய்வதற்கான சிறப்பு உத்தியை நம்பிக்கை கூட்டணி வகுத்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

“எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதற்காக எங்களுக்கென ஒரு தனிப்பட்ட உத்தியும் உள்ளது. குறிப்பாக ஜொகூருக்கு வெளியே வசிக்கும் மற்றும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்களது ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிப்பதை உறுதி செய்வதே தற்போது எங்களின் முக்கிய நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் அதிக வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதே நம்பிக்கை கூட்டணியின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles