
69- வது சுதந்திர தின கொண்டாட்டம் படாங் கோத்தா லாமா மைதானத்தில் நடைபெற்றது . பினாங்கு மாநில ஆளுனர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா ஹாஜி ரம்லி பின் ஙா தாலிப் சிறப்பு வருகை தந்தார். பினாங்கு முதல்வர் சௌகோன் யாவ் அவர்கள், முதலாம் துணை முதல்வர் டத்தோ டாக்டர் முகம்மத் அப்துல் ஹமீட், இரண்டாம் துணை முதல்வர் மாண்புமிகு ஒய்.பி ஜக்தீப் சிங் டியோ பினாங்கு மாநில செயலாளர் டத்தோ டாக்டர் ஜஃப்ரி பின் அப்துல் ஜலில் ஆட்சி குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 125 அணிவகுப்புக் குழுக்கள் பங்கேற்றன.

சுதந்திர தின ஊர்வளத்தில் முஸ்லீம் லீக் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹாஜி ஹாஜா நஜ்முத்தீன், துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஷாகுல் ஹமீது பினாங்கு முஸ்லீம் லீக் செயலாளர் மாட் நூர், மற்றும் ஏற்பாட்டுக்குழு தலைவர் இளைஞர் அணி தலைவர் ஜமீல் காதிர் கனி . பெண்கள் அணி தலைவி ஷக்கினா மூனா,லீகா முஸ்லீம் அணி வகுப்பில் ஆண்கள் பெண்கள் சுமார் 80 நபர்களும், பினாங்கு சி – எம்-எஸ் தலைவர் ஹஸான், ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி அப்துர்ரஹ்மான் 37 நபர்கள் கலந்து சிறப்பித்தனர்




