26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சிறுவன் சச்சின் வர்மாவுக்கு மின்னியல் சக்கர நாற்காலி

🔥 Views : 7
👁 Reading Now : 65

பிறப்பிலேயே ஒரு விதமான வினோத நோயினால் பாதிக்கப்பட்டு
அவதியுற்று வரும் 6 வயது சிறுவன் என்.சச்சின் வர்மாவுக்கு பத்து உபான்
சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் முயற்சியில் மின்னியல் சக்கர
நாற்காலி வழங்கப்பட்டது. அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஆதரவு
கொடுக்கும் நோக்கத்தோடு,மிண்டன் ஹைட்ஸ் வட்டாரத் தொழில்
முனைவர் பி.எஸ்.தாஹிர் 1,900 வெள்ளி மதிப்புள்ள சக்கர நாற்காலியை
வழங்கி உதவினார். கடந்த மே மாத இறுதியில் இந்த குடும்பத்தின் நிலைமை
கண்டறிந்து கண்டறிந்து வாக்குறுதி வழங்கியபடி,நல்லுள்ளம் கொண்ட
நண்பர் மூலமாக இந்த உதவியை செய்து கொடுத்தாகவும்,அவருக்கு
நன்றியையும் ஆ.குமரேசன் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles